படி (பெயர்ச்சொல்)
பொருள்கள்
பொருள் | எடுத்துக்காட்டு |
---|---|
அளக்கும் கருவி | ஒரு படி அரிசி போட்டுச் சோறு வடி. |
ஒரு நூலின் படி (copy) | தொல்காப்பியப் படிகளில் சில பிழைகள் இருப்பதை நிறைய தமிழறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். |
வாயில் நிலையின் கீழ்க் குறுக்குக்கட்டை | வாசற்படியில் உட்காராதே, கடன் வரும். |
ஒருவகை ஊதியம் | எனக்கு truck ஓட்டினால் மணிக்கு 50 ரூபாய் படிக்காசு கிடைக்கும். |
வரி | கோயில் திருவிழாவிற்கு தலைக்கட்டு ஒன்றிற்கு 500 ரூபாய் படி கட்ட வேண்டும். |
கட்டணம் | வேலைக்கு விண்ணப்பிக்க ரூ.1000 படி கட்ட வேண்டும். |
சுவடு | வயலில் மான் காலின் படி தெரிகிறது. |
நிலை | மாணவர்களில் அவன் முதற்படியிலிருக்கிறான். படிப்பு ஒரு படி உயர்த்தும் திறன் கொண்டது. எப்படி இருக்கிறீர்கள்? |
பக்கம் (place) | அப்படி போய் நில். |
வழி | அப்படி போனால் நீங்கள் நகரத்தை அடையலாம். |
தன்மை (nature) | உள்ளதை உள்ளபடி காட்டுவது கண்ணாடி. |
விதம் | அவன் சொன்னபடியே செய். |
Step | வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறியவன் வெற்றியைத் தக்கவைத்துக்கொள்வான். |
மாடிக்கு ஏறும் படி (Stair) | படியில் எண்ணெய் சிந்தியிருக்கிறது. மாடிக்குப் போகும்போது கவனமாக ஏறவும். |
கட்டம் (Stage) | வாழ்க்கையில் நாம் பல படிகளைத் தாண்டிதான் இந்த நிலையை அடைந்திருப்போம். |
படி (வினைச்சொல்)
பொருள்கள்
பொருள் | எடுத்துக்காட்டு |
---|---|
வாசி (read) | இந்தக் கடிதத்தைப் படித்துக்காட்டு. |
கல் (learn) | ஒருவன் பட்டப்படிப்பாவது படித்திருக்கவேண்டியது அவசியம். |
கட்டுப்படுத்தல் | பெரியோருக்குப் படிந்து நாட. |
பொருந்துதல் | இந்தப் பலகை படியவில்லை. |
விலை படிதல் | விலை படியாததால் அந்தப் பொருளை வாங்கவில்லை. |
ஒத்து வருதல் | நீ சொல்றது நமக்குப் படியாது. |
கீழே படிதல் | தண்ணீரை கொதிக்க வைத்தால் உப்பு கீழே படியும். |
ஒத்திப்படுத்துதல் | தலையில் எண்ணெய் தடவி படிய சீவிட்டு வா. |
விளக்கப்படங்கள்


Discover more from களஞ்சியம்
Subscribe to get the latest posts sent to your email.