படி

படி (பெயர்ச்சொல்)

பொருள்கள் 

பொருள்எடுத்துக்காட்டு
அளக்கும் கருவிஒரு படி அரிசி போட்டுச் சோறு வடி.
ஒரு நூலின் படி (copy)தொல்காப்பியப் படிகளில் சில பிழைகள் இருப்பதை நிறைய தமிழறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வாயில் நிலையின் கீழ்க் குறுக்குக்கட்டைவாசற்படியில் உட்காராதே, கடன் வரும்.
ஒருவகை ஊதியம்எனக்கு truck ஓட்டினால் மணிக்கு 50 ரூபாய் படிக்காசு கிடைக்கும்.
வரிகோயில் திருவிழாவிற்கு தலைக்கட்டு ஒன்றிற்கு 500 ரூபாய் படி கட்ட வேண்டும்.
கட்டணம்வேலைக்கு விண்ணப்பிக்க ரூ.1000 படி கட்ட வேண்டும்.
சுவடுவயலில் மான் காலின் படி தெரிகிறது.
நிலைமாணவர்களில் அவன் முதற்படியிலிருக்கிறான்.
படிப்பு ஒரு படி உயர்த்தும் திறன் கொண்டது.
எப்படி இருக்கிறீர்கள்?
பக்கம் (place)அப்படி போய் நில்.
வழிஅப்படி போனால் நீங்கள் நகரத்தை அடையலாம்.
தன்மை (nature)உள்ளதை உள்ளபடி காட்டுவது கண்ணாடி.
விதம்அவன் சொன்னபடியே செய்.
Stepவாழ்க்கையில் படிப்படியாக முன்னேறியவன் வெற்றியைத் தக்கவைத்துக்கொள்வான்.
மாடிக்கு ஏறும் படி (Stair)படியில் எண்ணெய் சிந்தியிருக்கிறது. மாடிக்குப் போகும்போது கவனமாக ஏறவும்.
கட்டம் (Stage)வாழ்க்கையில் நாம் பல படிகளைத் தாண்டிதான் இந்த நிலையை அடைந்திருப்போம்.
படி என்ற பெயர்ச்சொல்லின் பொருள்கள் எடுத்துக்காட்டுகளுடன்.

படி (வினைச்சொல்)

பொருள்கள்

பொருள்எடுத்துக்காட்டு
வாசி (read)இந்தக் கடிதத்தைப் படித்துக்காட்டு.
கல் (learn)ஒருவன் பட்டப்படிப்பாவது படித்திருக்கவேண்டியது அவசியம்.
கட்டுப்படுத்தல்பெரியோருக்குப் படிந்து நாட.
பொருந்துதல்இந்தப் பலகை படியவில்லை.
விலை படிதல்விலை படியாததால் அந்தப் பொருளை வாங்கவில்லை.
ஒத்து வருதல்நீ சொல்றது நமக்குப் படியாது.
கீழே படிதல்தண்ணீரை கொதிக்க வைத்தால் உப்பு கீழே படியும்.
ஒத்திப்படுத்துதல் தலையில் எண்ணெய் தடவி படிய சீவிட்டு வா.
படி என்ற வினைச்சொல்லின் பொருள்கள் எடுத்துக்காட்டுகளுடன்.

விளக்கப்படங்கள் 


Discover more from களஞ்சியம்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from களஞ்சியம்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading