சரி

சரி (பெயர்ச்சொல்)

பேச்சு வழக்குகள்

சரி

பொருள்கள் 

பொருள்எடுத்துக்காட்டு
உண்மைஅரிச்சந்திரன் பேசுவது சரியாகத்தான் இருக்கும்.
Rightஒருவன் பணத்திற்காகப் பொய் சொல்வது சரியா?
நேர்குறுக்கு வழியில் பொருள் ஈட்டுவது தவறு. சரியான வழியிலேயே பொருள் ஈட்ட வேண்டும்.
Correctஇந்தக் கேள்விக்குப் பதில் சரியா என்று பார்.
சமம்எனக்குச் சரிநிகர் யாருமில்லை.
Okayநான் வருவதற்குள் இந்த வேலையை முடித்து வை. – சரி.
Perfectஎந்த ஒரு வேலையைச் செய்தாலும் அதனைச் சரியாகச் செய்ய வேண்டும்.
Superஉங்க புது வீடு சரியா இருக்கு.
Properசரியான முறையில் திட்டமிட்டு சேமித்தால் கோடீஸ்வரனாகலாம்.
Conductஅவன் சரி நன்றாயில்லை.
முடிவுஒரு ஊர்ல ஒரு நரியாம்; அதோட அந்தக் கதை சரியாம்.
Nillஉனக்கும் எனக்கும் கணக்கு சரியாகிவிட்டது.
முழுதும் (Full)இந்தப் பாத்திரம் சரியாக நிரம்பும்வரை நீர் ஊற்று.
கழியும் தன்மைமூன்றில் இரண்டு போனால் ஒன்று; மூன்றில் மூன்று சரியாகிவிடும் (கழிந்துவிடும்), எனவே பூஜ்ஜியம்.
Sameநாம் ஒன்றும் முக்கியமானவர்கள் கிடையாது. நாம் திருமணத்திற்கு போனாலும் சரிதான் போகலனாலும் சரிதான். அவங்க கோவித்துக்கொள்ள மாட்டார்கள்.
பொருத்தம் (match)நீயும் நானும் சரி ஜோடி.
மிகுதிஅவனிடம் சரியான பணம் இருக்கிறது.
அளவுஒருவரிடம் நாம் பொருள் பெற்றால் நாமும் சரிக்குச்சரி நம்மிடம் உள்ளவற்றைக் கொடுத்து ஈடுகட்ட வேண்டும்.
நல்லதுபுள்ளத்தாச்சி பெண்கள் பப்பாளி சாப்பிடுவது சரியல்ல.
கெட்ட (sarcastically)அவன் 10 இலட்சம் கையாடல் செய்துவிட்டானாம்; சரியான ஆளாத்தான் இருப்பான்போல.
சரிதான்! அவனே ஒரு வெத்துவேட்டு, அவனிடம் இந்தப் பொறுப்பைக் கொடுக்கலாமா?
இணைவாதாடுவதில் எனக்குச் சரி யாருமில்லை.
Exactnessநீ தற்போது சரியாக எங்கே நிற்கிறாய்? பேருந்து நிறுத்தத்திலா அல்லது வெளியிலா?
ஒழுங்குஉன் உடையைச் சரி செய்துகொள்.
பழுதின்மைஇந்தக் கடிகாரத்தை சரிசெய்து கொடு.
Slopeமலைச்சரிவில் மரங்கள் நட்டால் மண்ணரிப்பை கட்டுப்படுத்தலாம்.
Appropriateஇந்த நேரத்தில் இந்த விஷயத்தைப் பேசுவது சரியில்லை.
Suitableபடித்து முடித்தவுடன் உன் படிப்பிற்கு சரியான வேலையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
Fairகுடும்பத்துல நாம் மட்டும் எல்லாருக்கும் சம்பாதித்துக் கொட்டணுமா? இது சரியில்லை.
காலிபிரியாணி சரியாய்ப் போனது.
Fitஇந்த உடை உனக்குச் சரியாக இருக்கும்.
சம்மதம் (Yes)எனக்காக அதனைச் செய்வாயா? – சரி.
கேட்பவர் பேசுபவர்களுக்கு அடுத்தது கூறலாம் என்று கொடுக்கும் இசைவுநான் இருட்டுல போயிட்டு இருந்தேனா… சரி… அப்போ திடீர்னு யாரோ என் முதுகுல கை வைத்தார்கள்… சரி, அப்புறம்?….
சரி என்ற பெயர்ச்சொல்லின் பொருள்கள் எடுத்துக்காட்டுகளுடன்.

சரி (வினைச்சொல்)

பேச்சு வழக்குகள்

சரி

பொருள்கள்

பொருள்எடுத்துக்காட்டு
தன்னுடைய நிலையிலிருந்து கீழ்நிலை செல்லுதல்அவன் தொழில் நண்பனின் வஞ்சகத்தால் சரிந்தது.
Collapseஅடுக்கி வைத்த புத்தகங்கள் சரிந்தன.
தன் மகன் இறந்த செய்தி கேட்டவுடன் நெஞ்சை பிடித்துக்கொண்டு சரிந்தான்.
சாய்த்து வைத்த பொருள் கீழிறங்கி விழுதல்சுவற்றில் சாய்த்து வைத்த பலகை சரிந்து தரையில் விழுந்தது.
ஒழுங்கின்மையாக்குதல்நெற்குவியலை சரிக்காதே.
சரி என்ற வினைச்சொல்லின் பொருள்கள் எடுத்துக்காட்டுகளுடன்.

விளக்கப்படங்கள் 


Discover more from களஞ்சியம்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from களஞ்சியம்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading